சாம்பிராணியின் வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும், மனதை நிதானப்படுத்தும், ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். சாம்பிராணி தூபம் மூலம் சளித் தொந்தரவு, தலைவலி, அதிக தும்மல், பொடுகு, பேன் தொல்லை, தலைமுடி உதிர்தல், மூக்கில் நீர்வடிதல் போன்ற பல்வேறு தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம். ஆஸ்துமா, மூச்சடைப்பு உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.