2026 தேர்தல் தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும் என்று தவெக தலைவர் விஜய்க்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி முதல் ஆளாய் வாழ்த்துக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.