இராஜபாளையம் அருகே பள்ளி விடுதி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது. கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரராஜபுரம் கிராமத்திலுள்ள ஆதிதிராவிட பள்ளியின் விடுதியின் முன்பாக தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சேத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மனோகரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் ரோந்து பணி செய்தனர். அப்போது அய்யன் - கொல்லகொண்டான் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.