இராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பொட்டல்பட்டி முக்கு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது சேத்துார் ஊரணி தெருவை சேர்ந்த போத்திராஜன் என்பவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் 1000 ரூபாயை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.