அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி சார்பில் நோயாளிகளுடன் வரும் பொதுமக்கள் தங்குவதற்காக ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்குமிட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் கட்டிடத்தில் உள்ளே அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் பார்வையிட்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.