விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அலங்கார மீன்வளர்ப்பு குறித்து, தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகளை பார்வையிட்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டறிவு பயண வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொண்டு, அலங்கார மீன் வளர்ப்பில் பெண்கள் ஈடுபடும் வகையில் விருதுநகர் மாவட்ட மகளிர் சுயஉதவி குழு இஉறுப்பினர்களை மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகளை நேரில் சென்று பார்வையிட்டு மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இன்று; அலங்கார மீன் வளர்ப்பு குறித்த பட்டறிவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 50 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.