விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சி உடன் இணைப்பது தொடர்பான அறிவிப்பு வந்ததிலிருந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஆகஸ்ட் 15ஆம் சுதந்திர சுதந்திர தினத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அறிவிப்பை திரும்ப பெறக் கோரியும் இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூரைக்குண்டு, செவல்பட்டி, யானைக் குழாய், அல்லம்பட்டி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் கறுப்பு கொடி கட்டியும்
மேலும் கையில் கருப்பு கொடி ஏந்தி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.