குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்

79பார்த்தது
குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்
அருப்புக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குடிநீர் ஏற்றும் மையம் மூலமாக அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள தொட்டியில் வைகை மற்றும் தாமிரபரணி தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் பின்னர் சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த நீரேற்றும் மையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியின் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று தினங்களாக குடிநீர் வீணாக சாலையில் செல்வதாக புகார் எழுந்துள்ளது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்வதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‌
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி