அருப்புக்கோட்டை நகராட்சி நுண்உரக்கூட மையத்தில் "தூய்மையாக இருங்கள், நோயின்றி இருங்கள்" திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு மகளிருக்கு குப்பைகளிலிருந்து எப்படி உரம் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறை குறித்து விளக்கினர். மேலும் மகளிர் சுய உதவி குழுவினர் நுண்உரக்கூட மையம் முழுவதும் பார்வையிட்டு உரம் தயாரிக்கும் முறை பற்றி அறிந்து கொண்டனர். இதில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.