தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

78பார்த்தது
காரியாபட்டி அருகே தோனுகால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(25). கூலி வேலை செய்து வந்த பாக்கியராஜ் கடந்த சில தினங்களாக கடுமையான உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாக்கியராஜ் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் பஸ் ஸ்டாப்பில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ‌ ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிர் இழந்தார். ‌ இந்த சம்பவம் குறித்து பாக்கியராஜ் மனைவி நந்தினி அளித்த புகார் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி