130 கிலோ புள்ளி திருக்கை மீன் ரூ.39,000-க்கு விற்பனை

56பார்த்தது
130 கிலோ புள்ளி திருக்கை மீன்  ரூ.39,000-க்கு விற்பனை
புதுச்சேரி: காரைக்கால் துறைமுக பகுதியில் விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துக்கொண்டு கரை திரும்பிய மீனவர் ஒருவரின் வலையில் 130 கிலோ எடை கொண்ட புள்ளி திருக்கை மீன் சிக்கியது. இந்த மீனை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். அந்த புள்ளி திருக்கை ரூ.39 ஆயிரத்துக்கு விற்பனையானது. 
புள்ளி திருக்கை மீன் மருத்துவகுணம் வாய்ந்தது. முள் இல்லாதது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பத்திய உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி