மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில், அங்கு டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பதாகைகளுடன் மக்கள் நிற்கும் காட்சி கவனம் பெற்றுள்ளது. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக அட்டாப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு வருகை தந்த சிலர், 'Save அரிட்டாபட்டி' என்ற வாசகம் அடங்கிய டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான பதாகையை ஏந்தியுள்ளனர்.