திருவள்ளுவர் தினம்.. கமல்ஹாசன் உணர்ச்சி பதிவு

80பார்த்தது
திருவள்ளுவர் தினம்.. கமல்ஹாசன் உணர்ச்சி பதிவு
திருவள்ளுவரை தலைசிறந்த தமிழறிஞராக அங்கீகரிக்கப்பட்டு, 1935 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அன்று வள்ளுவர் தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் வள்ளுவரை கொண்டாடும் நிலையில், கமல்ஹாசன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மதங்களைச் சாரா மனிதம் பாடியவர், வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர், யாப்பின் அருங்கல மாலுமியானவர், மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி