விவசாயத்தின் உற்ற தோழனாய், வீரத்தின் அடையாளமாய், உழவனின் உற்ற தோழனாய்,
விளங்கும் பசுக்கள், எருதுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், தமிழகமெங்கும் விவசாயிகள்
மாட்டுப்பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து நீராடி, மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு, குங்குமம் வைத்து மாலையிட்டு போற்றினர். பசுக்கள், காளைகளுக்கு பொங்கல் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில இடங்களில் கோமாதா பூஜை செய்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.