பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் வருகிற 19ஆம் தேதி இயக்கப்படுகிறது. தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில் வண்டி எண். 06168, தூத்துக்குடியில் இருந்து 19-01-2025. ஞாயிற்றுக்கிழமை மாலை 04-25 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 03-45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.