விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் முற்றுகை

2125பார்த்தது
விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் முற்றுகை
தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் சம்பத், பொதுச்செயலாளர் சக்திவேல், பொருளாளர் திருநாவுக்கரசு, சட்ட ஆலோசகர் பகலவன் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர்.

அதன் பின்னர் அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: - கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாநில கூட்டமைப்பு தலைவர் ஜானகிராமனின் செயல்பாடுகள் சங்க கூட்டமைப்பின் நலனுக்கு எதிராக இருந்ததாலும், முறைகேட்டில் ஈடுபட்டதாலும் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து மாநில தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தோம். ஆனால் அவர், மாநில சங்கங்களின் கூட்டமைப்பின் நற்பெயரை கெடுத்து அவதூறு பரப்பி வருகிறார். அதோடு கூட்டமைப்பின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே முன்னாள் தலைவர் ஜானகிராமன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி