தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (பிப்., 07) தொடங்குகிறது. இந்த தேர்வுகள் வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வை எழுத உள்ளனர். இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட செய்முறை தேர்வுகளை மாணவர்கள் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பு குழு அதிகாரிகள் பள்ளிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள்.