விழுப்புரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை

66பார்த்தது
விழுப்புரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் சில்லென்ற காற்றோடு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை 4. 30 மணிக்கு வானம் இருள் சூழ்ந்து கருமேக மூட்டத் தோடு காணப்பட்டது. தொடர்ந்து, பலத்த சூறாவளி காற்று வீசியதால், சென்னை, திருச்சி, புதுச்சேரி நெடுஞ்சாலைகளில் புழுதி பறந்தன. இதனால், வாகனங்களில் சென்ற பொதுமக்கள், யாரும் மேற்கொண்டு செல்ல முடியாமல் சாலையின் நடுவே நின்றனர். இது மட்டுமின்றி, புதுச்சேரி நெடுஞ்சாலையில் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்கள் சூறாவளி காற்றில் திடீரென சாய்ந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். பின், அங்கிருந்த சிலர், அந்த பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சூறைகாற்றிற்கு பின்னர் மாலை 5. 00 மணிக்கு பெய்ய துவங்கிய மழை, அரை மணி நேரம் நீடித்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதோடு சூறைக் காற்றும் ஓய்ந்தது. சூறைக் காற்று வீசியதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி