மாநிலங்களுக்கு ரூ.1.39 லட்சம் கோடியை விடுவித்தது மத்திய அரசு!

69பார்த்தது
மாநிலங்களுக்கு ரூ.1.39 லட்சம் கோடியை விடுவித்தது மத்திய அரசு!
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பல்வேறு திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 3வது தவணையாக ரூ.1.39 லட்சம் கோடி வரிப்பகிர்வை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது. பிகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்தியப்பிரதேசத்துக்கு ரூ.11.157 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.11,157, மேற்குவங்கத்துக்கு ரூ.8,978 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி, ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.9564 கோடி, குஜராத்துக்கு ரூ.4,943 கோடி, கேரளாவுக்கு ரூ.2,736 கோடி, வரிப்பகிர்வாக விடுவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி