விழுப்புரம்: தனியார் மருத்துவமனை முற்றுகை

4209பார்த்தது
விழுப்புரம்: தனியார் மருத்துவமனை முற்றுகை
கோலியனுார் அடுத்த வடவாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம், 50; கூலித்தொழிலாளி. உடல்நிலை மற்றும் பாதித்ததால் நேற்று மதியம் 1: 00 மணிக்கு விழுப்புரம் கே. கே. ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ரத்த மாதிரி, சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு பின், குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

பின், அவர் வீட்டிற்கு புறப்படும் முன் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தொடர்ந்து அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, 2: 45 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில், மோகனசுந்தரம் இறந்திருப்பது தெரியவந்தது.

தனியார் மருத்துவமனையில் டாக்டரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மோகனசுந்தரத்தின் உறவினர்கள், மாலை 4: 30 மணிக்கு தனியார் மருத்துவமனை முன் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மருத்துவமனை தரப்பில், உடல் சோர்வால் வரும் நோயாளிகளுக்கு அளிக்கும் வழக்கமான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. வீட்டிற்கு கிளம்பும் முன் திடீரென மயக்கம் ஏற்பட்டது. சிகிச்சையின் போது எந்த பக்க விளைவுகளும் ஏற்படாத நிலையில், மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக உயிரிழந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி