விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவானந்தா நகரைச் சேர்ந்த சேர்ந்த பவித்ரா (24) என்பவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். அப்போது 15 வயது பள்ளி மாணவனுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனையறிந்த மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பவித்ராவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.