மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

81பார்த்தது
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது48). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 80 ஆயிரமாகும். இதுகுறித்து அவர், வளவ னூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளை திருடியவர் விழுப்புரம் வண்டிமேடு ராஜாமணி நகரை சேர்ந்த டேவிட் (46) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக் கிளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி