டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிரம்ப் உடல்நலம் பெற வேண்டும் என்றும், அவரின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். டெல்லி தில்ஷாத் கார்டனில் உள்ள மா பக்லாமுகி சாந்தி பீடத்தில் இந்த பூஜையை நடத்தியுள்ளனர். மேலும் ட்ரம்பின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாக பூஜை செய்தவர்கள் கூறியுள்ளனர்.