அங்கன்வாடி மையம் கட்டுமான பணி எம். பி ரவிக்குமார் ஆய்வு

60பார்த்தது
அங்கன்வாடி மையம் கட்டுமான பணி எம். பி ரவிக்குமார் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் இருளர் குடியிருப்பு பகுதியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பி னர் நிதியில் இருந்து ரூ. 12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ரவிக்குமார் எம். பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பேரா சிரியர் பிரபா கல்விமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வீர. விடுதலைச் செல்வன், மாவட்ட பொருளாளர் அ. மா. இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் டி. எடையார் ரமேஷ், ஒன்றிய செயலாளர் காசிநாதன், திருக்கோவிலூர் நகர செயலாளர் சத்யதாஸ், துணை செயலாளர் மைக்கேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி