மருத்துவக் கல்லுாரியில் மாணவர்கள் கருத்தரங்கம்

80பார்த்தது
மருத்துவக் கல்லுாரியில் மாணவர்கள் கருத்தரங்கம்
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை படிப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் நடந்த கருத்தரங்கை கல்லுாரி டீன் ரமா தேவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் துறை தலைவர் சவீதா வரவேற்றார்.

கருத்தரங்கில் அறுவை சிகிச்சை குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு டாக்டர்கள் வெங்கடேஸ்வரன், சிட்டி பாபு பதில் அளித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவ கண்காணிப்பாளர் தரனேந்திரன், ஆர். எம். ஓ. , ரவிக்குமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி