உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சசிகலா, "நரகத்தில் இருக்கும் ஒருவன் செய்த சிறு புண்ணியத்தால் சொர்க்கத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கிறது. சிலந்தி இழை மூலம் அவன் சொர்க்கத்திற்கு மேலேறி செல்லும்போது, அந்த இழையை மேலும் இரண்டு மூன்று பேர் பிடித்து ஏறி வருகின்றனர். இது பிடிக்காத அந்த மனிதன் பின்னால் வந்தவர்களை தள்ளிவிட முயற்சித்தபோது, இழை அறுந்து அவனும் நரகத்தில் விழுகிறான்" என்று கூறினார்.