விழுப்புரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயம் போலீசார் விசாரணை

57பார்த்தது
விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மகள் திவ்யா, 17; இவர், மாம்பழபட்டு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற திவ்யா காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி