மாவட்ட நம்மாழ்வார் வைணவ மாநாடு

60பார்த்தது
மாவட்ட நம்மாழ்வார் வைணவ மாநாடு
விழுப்புரம் ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், மாவட்ட நம்மாழ்வார் வைணவ மாநாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி, வழக்கறிஞர் செல்லப்பா துவக்கி வைத்தார். சபை இணைத் தலைவர் பாண்டுரங்கன், கருடக் கொடி ஏற்றினார். வனிதா தேவராஜன் இறை வணக்கம் பாடினார்.

நம்மாழ்வார் சபை தலைவர் லட்சுமண சுவாமி வரவேற்றார். சபை செயலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

திருக்கோவிலுார் ஜீயர் மடத்தின் 26ம் பட்ட ஜீயர் சுவாமி தலைமை தாங்கி, மங்களாசனம் மற்றும் விருது வழங்கி, ஆசி வழங்கினார். தொடர்ந்து, சேஷாத்திரி சுவாமி, ஹரிப்பிரியா தேவநாதன் ஆகியோர் ஆன்மீக உரையாற்றினர். விழுப்புரம் ருக்மணி குழுவினரின் விஷ்ணு சகஸ்ரநாமம் நிகழ்ச்சியும், பல்வேறு பஜனை கோஷ்டியினரின் ததியாராதனையும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி