திருக்கோவிலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை விந்தியா

66பார்த்தது
வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து திரைப்பட நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா திருக்கோவிலூர் 5மனை சந்திப்பில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி