சென்னை வானிலை மையம் 15ஆம் தேதி வரை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்றிரவு(அக்.11) விழுப்புரம், முண்டியம்பாக்கம், கோலியனூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.