மஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வேன் என தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி வேட்பாளர் ராஜேசாஹேப் தேஷ்முக் விநோதமான வாக்குறுதி அளித்துள்ளார். பார்லி தொகுதியில் தாம் வெற்றி பெற்றார், இளைஞர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வேன் என்றும், திருமணத்தின் போது ஆண்களில் வேலை குறித்து விசாரிக்கப்படும் என்பதால், அவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்குவேன் என அறிவித்துள்ளார்.