கூடலூரில் இன்று (நவ. 08) அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது அதன் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்கூட மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். அதே போல பேருந்து ஓட்டுநரும் பேருந்தை அதிவேகமாக ஓட்டி சென்றதை காணமுடிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரண்டு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.