விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள தெருக்களில் சாலை, குடிநீர், மின்விளக்குகள் போன்ற பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. இந்நிலையில் மரக்காணம் அடுத்த கோணவாயன் குப்பத்திலிருந்து எக்கியர்குப்பத்தை நோக்கி விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப்பாதையில் மூன்று கி. மீ. , துாரத்திற்கு மேல் சிமென்ட் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் சாலை அமைப்பதாலும், சாலைப் பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த பனை மரங்கள் அகற்றப்பட்டதாலும், கோணவாயன்குப்பம் மற்றும் மரக்காணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.