விசிக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் மஸ்தான் பிரச்சாரம்

58பார்த்தது
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பானை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரத்தில் பிரம்மாண்ட பானை சின்னம் வடிமைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி, திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டிவனம் நகரம் முழுவதும் இரு சக்கர பேரணியானது தொடங்கியது. இந்த பேரணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் அடுத்த இருதயபுரத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் நகரம் முழுவதும் வி. சி. க விழுப்புரம் வேட்பாளர் துரை ரவிக்குமாருக்கு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்த இருசக்கர வாகன பேரணியானது திண்டிவனம் நேரு வீதி, காந்தி சிலை, தேவாங்கர் வீதி, ரோசனை, கிடங்கல் போன்ற முக்கிய வீதிகள் வழியாக வந்து திண்டிவனம் மேம்பாலம் ரவுண்டானா அருகே முடிவடைந்தது.

பேரணியில் பிரம்மாண்ட பானை சின்னம் வடிவமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சென்றது.

தொடர்புடைய செய்தி