புறம்போக்கு நிலம் பட்டா ரத்து செய்ய சாலை மறியல்

58பார்த்தது
மயிலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஜக்காம்பேட்டை சந்திப்பில் பேரணி கிராம வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை முன்னாள் பேரணி கிராம உதவியாளர் குமார் என்பவர் ஆக்கிரமித்து அவரது மருமகள் சரண்யா பெயரில் 2015ல் பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளார். இது சம்பந்தமாக பேரணி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டாவை ரத்து செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலம் போலீசார் முரளி ஈடுபட்டவர்களிடம் பேச்சாவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி