செஞ்சி அருகே உல்லாசத்துக்கு மறுத்ததால் பெண் அடித்துக்கொலை

66பார்த்தது
செஞ்சி அருகே உல்லாசத்துக்கு மறுத்ததால் பெண் அடித்துக்கொலை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சுகுமார் (வயது 28), தொழிலாளி. இவருக்கும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் கிராமத்தில் உள்ள கலந்தமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் திவ்யா (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சுகுமாருக்கு திருமணத்திற்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இது புது வாழ்க்கையில் பல கனவுகளுடன் இருந்த புதுப் பெண் திவ்யாவுக்கு இடியாய் அமைந்தது. மன கவலையுடன் இருந்த திவ்யா தனது கணவருக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வந்துள்ளார். இருப்பினும் சுகுமார் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதுபோதையில் உள்ளாசதுக்கு மறுத்த மனைவியை கொலை செய்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி