தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்

57பார்த்தது
தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சியின் துணை கிராமமாக பாலப்பாடி உள்ளது. இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 1000க்கும் அதிமான வாக்காளர்கள் உள்ளனர்.

துணை கிராமமாக இருப்பதால் இந்த கிராமத்திற்கு அரசின் நேரடி திட்டங்கள் கிடைக்கவில்லை. இதனால், பாலப்பாடியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.

இது குறித்த சமாதான கூட்டம் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ஏழுமலை தலைமயில் பாலப்பாடி கிராம மக்கள், சத்தியமங்கலம் ஊராட்சி தலைவர் அபர்ணா ரவிசங்கர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தேர்தலுக்குப்பின், பாலப்பாடியை தனி ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி