வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்து அமைச்சர்

84பார்த்தது
வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்து அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலரின் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஈர்பு வாகனம் மற்றும் 15-வது நிதி ஆணைய நிபந்தனை மானியம் 2023-24 இரண்டாவது தவணைத் தொகை திட்டத்தின் கீழ், 7 பேட்டரி வாகனங்களை அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இயற்கை பேரிடர் வடகிழக்கு பருவமழை 2024 பேரிடர் காலங்களில் தயார் நிலை மற்றும் உடனடி நிவாரணம் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். உடன் பேரூராட்சி மன்ற தலைவர் , துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, செயல் அலுவலர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி