விழுப்புரம் : கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஊராட்சி தலைவர் தர்ணா

69பார்த்தது
விழுப்புரம் : கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஊராட்சி தலைவர் தர்ணா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சோ. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 54; ஊராட்சி தலைவர். செஞ்சி தெற்கு ஒன்றிய தி. மு. க. , வில் துணைச் செயலாளராக உள்ளார். இவர், கடந்த 2019ம் ஆண்டு சத்தியமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 3. 12 லட்சம் ரூபாய்க்கு நகைகளை அடமானம் வைத்தார். இந்த சங்கத்தில் உறுப்பினர்களின் பல லட்சம் ரூபாய் டிபாசிட் பணத்தை கையாடல் செய்து மோசடி நடந்ததால் 22ம் ஆண்டு சங்கத் தலைவர், செயலாளர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிந்தனர். வழக்கு பதியப்பட்டதால் ஆய்வுக்காக கணக்குகளை சில மாதம் முடக்கி வைத்திருந்தனர்.

அப்போது ராஜேந்திரன் நகையை மீட்க சென்றார். வழக்கு விசாரணை நடப்பதால் நகையை மீட்க முடியாது என திருப்பி அனுப்பி உள்ளனர். இதன் பிறகு கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து நகை கடன் தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நேற்று ராஜேந்திரன் நகையை மீட்க சென்ற போது, நேற்று வரை ஒரு லட்சத்து 68 ஆயிரம் வட்டி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேந்திரன் வங்கியில் வழக்கு நடந்த காலத்திற்கு வட்டி கட்ட முடியாது என கூட்டுறவு சங்கத்தின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தி நடத்தி, கூட்டுறவுத்துறை உயரதிகாரிகளை சந்தித்து தீர்வு காணும் படி அறிவுறுத்தி ராஜேந்திரனை அனுப்பி வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி