மின்கசிவால் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் தீ விபத்து

69பார்த்தது
மயிலம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மதிவாணன். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மாடி வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திண்டிவனம் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை துரிதமாக செயல்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் கார் தப்பியது.

இந்த தீ விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி