தீவனூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

557பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து நியாய விலைக் கடைகளில் இந்தோனேசியா மலேசியா போன்று பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பனை செய்வதை ரத்து செய்து , தமிழ்நாட்டில் விளையும் தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை நியாய விலை கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு விவசாயிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியும், விளைப் பொருட்கள் வீணாவதை தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு உதவிட வேண்டி வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்பு திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தங்கள் கையில் வைத்திருந்த பாமாயில் எண்ணெயை தரையில் கொட்டி கோஷங்கள் எழுப்பினார்கள்.
சம்பவ இடத்தில் இருந்த திண்டிவனம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தீவனூரில் உள்ள திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் திடீரென்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி