சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

83பார்த்தது
சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
செஞ்சி 'பி' ஏரி சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவில் பக்தர்கள் வேன், லாரியை இழுத்தும், செடல் குத்தி லாரிகளில்தொங்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஒழுங்குமுறை விற்பனை கூட நெல், அரிசி, வேர்க்கடலை வியாபாரிகள் மற்றும் எடை பணி தொழிலாளர்கள் சார்பில் ஆடி கிருத்திகை விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 8: 00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து அக்னி சட்டி ஊர்வலம். 100 கிலோ எடை கொண்ட சக்திவேலுக்கு 108 திரவியங்களால் அபிஷேகம், சக்திவேல் ஊர்வலம்நடந்தது. மதியம் 12: 00 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் சாந்து அபிஷேகம், எண்ணெய் சட்டியில் வடை எடுத்தல், மார்பு மீது மாவிடித்தல்நிகழ்ச்சி நடந்தது.

பிற்பகல் 3: 00 மணிக்கு தீமிதித்தல், செடல் போட்டு ஆகாயமார்கமாக சாமிக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். மாலை 5: 00 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்தும், செடல் அணிந்து லாரி, வேன், ஜே. சி. பி. , இயந்திரம், கிரோன்களில் தொங்கியும், தேராக இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி