நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், செப்டம்பர் 22 அல்லது 26-ம் தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மாநாட்டில் விஜய்யின் கொள்கைகள் என்ன? கட்சிக் கொடி, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.