விஜய் ரசிகர்கள் சேதாரம் - தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிப்பு?

4470பார்த்தது
விஜய் ரசிகர்கள் சேதாரம் - தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிப்பு?
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வந்திருந்த விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமடைந்தது. மேலும், சேத கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி