நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவின் சி டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி, பாஜகவின் சி டீம் என்பதால்தான் நாங்கள் ஏ டீமோ, பி டீமோ இல்லை என்று விஜய் நேற்று கூறியுள்ளார். 'நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை. அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள்' என்று கூறியுள்ளார்.