உ.பி: மகா கும்பமேளாவில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18 மற்றும் 19 இல் அமைந்துள்ள லவ் குஷ் சேவா மண்டல் முகாமில் இன்று (பிப்.15) மாலை 6:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.