மதுரை மாவட்டத்தில் 6வது ஆண்டாக கல்விக்கடன் முகாம் டோக் பெருமாட்டி கல்லூரியில் இன்று (ஆக.29) நடைபெற்றது. ஒரே நாளில் 21.92 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பி வந்தவுடன், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார். எனவே தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பதை வெகு விரைவில் எதிர் பாருங்கள்” என்றார்.