தேனி மாவட்டத்தில் உள்ள தக்காளி சந்தைகளுக்கு தக்காளி வரத்து திடீரென அதிகரித்தது. இதனால், கடந்த சில மாதங்களாகவே கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. தற்போது 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் கீழே சரிந்துள்ளது. நாளுக்கு நாள் தக்காளி வரத்து அதிகரித்து வருவதால், விலை மேலும் வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.