வெம்பக்கோட்டை அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பக்கத்தில், ''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது" என்று பதிவிட்டுள்ளார்.