நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் இன்று (23. 11. 2024) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ. எல். ஈஸ்வரப்பன், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா கமல் பிரசாத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா, ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் கஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் வி. எ. சிவா, ஒன்றியக்குழு உறுப்பினர் எ. எழிலரசி அருள், வட்டார வளர்ச்சி அலுவலர் பூம்பாவை, ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் எஸ். அமுதா பழனி, ஊராட்சி மன்ற செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.